அதிபர் டிரம்ப் கூட்டத்தில் தூங்கி விழுந்தாரா?
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமைச்சரவைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நீண்ட நேரத்திற்கு தம்முடைய கண்களை மூடியிருந்த காணொளி இணையத்தில் பரவி வருகிறது.
அந்தக் கூட்டம் சுமார் 90 நிமிடங்களுக்கு நீடித்தது.
அவர் தூங்குகிறாரா? இல்லை கண்களுக்கு ஓய்வு கொடுக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
சில நேரங்களில் அதிபர் டிரம்ப் தம்முடைய இருக்கையில் சாய்ந்து கண்களை மூடியிருப்பது காணொளிகளில் தெரிந்தது.
அண்மையில் நியூயார்க் டைம்ஸ் (New York Times) நாளேடு அதிபர் டிரம்ப்பின் வேலைகள், அவருடைய உடல்நலம் ஆகியவை பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தது.
அந்தக் கட்டுரையைக் குறைகூறிய அதிபர் டிரம்ப், தாம் சிறந்த நிலையில் இருப்பதாகச் சொன்னார்.
இந்நிலையில் கூட்டத்தில் தூங்கி விழுந்ததைக் காட்டும் படங்கள் வெளிவந்துள்ளன.
அதிபரின் சுகாதாரம், உடல் ஆற்றல் ஆகியவை குறித்துப் பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

ஆதாரம் : Others