ஹோர்முஸ் நீரிணைக்குத் தமது பெயரைச் சூட்ட விரும்பும் அதிபர் டிரம்ப்
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Evelyn Hockstein
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணைக்குத் தமது பெயரைச் சூட்ட யோசனை முன்வைத்துள்ளார்.
அந்த நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதனை 'Trump Strait' என்று பெயர் மாற்றலாமா என்று அவர் சமூக ஊடகத்தில் வினவினார்.
வெள்ளை மாளிகையும் அந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து, 'டிரம்ப் நீரிணை' என்று குறிக்கப்பட்ட வளைகுடா வரைபடத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டது.
ஈரான் உடனான போர் ஆறு மாதங்களாகத் தொடரும் நிலையில், திரு டிரம்ப் இந்த யோசனையை முன்வைத்தார்.
2025ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற முதல் நாளிலேயே மெக்சிகோ வளைகுடாவை 'அமெரிக்க வளைகுடா' என்று அதிபர் டிரம்ப் மறுபெயரிட்டார்.
மெக்சிகோவும் கனடாவும் அந்த மாற்றங்களை ஏற்கவில்லை.
மேலும் வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி (Denali) சிகரத்தின் பெயரை மவுண்ட் மெக்கின்லி (Mt McKinley) என்று அதன் முந்தைய பெயருக்கு மாற்றினார்.
ஆதாரம் : CNA