டிரம்ப்பின் அமைதிக் குழுவில் சேர இந்தியாவுக்கு அழைப்பு
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) நிறுவும் அமைதிக் குழுவில் இடம்பெற இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைதிக் குழு உலக சர்ச்சைகளைத் தீர்க்க முனையும்.
புது டில்லி அழைப்புக்கு இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த வாரம் சுவிட்சர்லந்தில் நடைபெறும் உலக பொருளியல் கருத்தரங்கில் அமைதிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குழுவின் நிரந்தர உறுப்பியம் பெற நாடுகள் 1 பில்லியன் டாலர் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
ஹங்கேரியும் வியட்நாமும் குழுவில் சேர ஒப்புக்கொண்டுள்ளன.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜோர்டான், கனடா, துருக்கியே, எகிப்து உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்குக் குழுவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கு மாற்றாக ஓர் அமைப்பை நிறுவ திரு டிரம்ப் எண்ணுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
குழு உறுப்பினர்களின் அதிகாரத்துவப் பட்டியலை விரைவில் அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.