Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க அதிபருக்கும் FIFA தலைவருக்கும் இடையிலான உறவு கசப்படையுமா?

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபருக்கும் FIFA தலைவருக்கும் இடையிலான உறவு கசப்படையுமா?
படம்: Pool via REUTERS/Jia Haocheng
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராகப் போர் தொடுத்தது அமெரிக்க அதிபருக்கும் அனைத்துலகக் காற்பந்து சம்மேளனத் தலைவருக்கும் இடையிலான உறவைச் சோதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்னும் 3 மாதங்களில் அமெரிக்கா காற்பந்து உலகக் கிண்ணத்தை ஏற்று நடத்தவிருக்கிறது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சம்மேளனத் தலைவர் ஜியானி இன்ஃபண்டினோவும் (Gianni Infantino) நெருங்கிய நண்பர்கள்.

அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் திரு இன்ஃபண்டினோ கலந்துகொண்டார்.

கடந்த டிசம்பரில் திரு இன்ஃபண்டினோ அதிபர் டிரம்ப்புக்கு சம்மேளனத்தின் அமைதி விருதை வழங்கினார்.

ஆனால் அண்மையில் தொடங்கிய போர் அந்த உறவில் சிக்கல்களை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டி நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகத் திரு இன்ஃபண்டினோ அதிபர் டிரம்ப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாகச் சம்மேளன ஊழியர்கள் சிலர் கூறினர்.

ஆனால் போர் எவ்வாறு அரபு நாடுகளைப் பாதிக்கிறது என்பதைத் திரு இன்ஃபண்டினோ இப்போது கருதவேண்டும் என்று சிலர் குறிப்பிட்டனர்.

கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அனைத்துலகக் காற்பந்தில் முக்கியப் பங்கு வகிப்பதால் அமெரிக்காவுடனான உறவைத் திரு இன்ஃபண்டினோ கவனமாகக் கையாள வேண்டும் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
 
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்