Skip to main content
"ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால்..."
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால்..." - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
"ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவில்லை என்றால்..." - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

(படம்: SAUL LOEB / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இன்றுக்குள் முடிவாகலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் முடிவாகவில்லை என்றால் ஈரான் கடுமையாகத் தாக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்ந்து சிக்கலாக உள்ளது.

ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பின் மீண்டும் சண்டை மூண்டதற்கும் நீரிணையே காரணம்.

ஈரான் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் கட்டணம் விதிக்கவும் விரும்புகிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி போர் தொடங்குவதற்கு முன்பு நீரிணை பொதுவானதாக இருந்தது.

பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாய் இருந்ததாகத் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சு சொன்னது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்