இஸ்ரேல் சென்றடைந்தார் டிரம்ப்
வாசிப்புநேரம் -
படம்: AP/Evan Vucci
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலுக்குச் சென்று சேர்ந்துள்ளார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu), அதிபர் ஐசாக் ஹெர்ஸோக் (Isaac Herzog) ஆகியோர் திரு டிரம்ப்பை வரவேற்றனர்.
காஸாவில் சண்டைநிறுத்தம் நடப்புக்கு வந்து 3 நாளாகிறது.
அந்த உடன்பாட்டின்படி ஹமாஸ் அமைப்பினர் 7 பிணையாளிகளை விடுவித்துள்ளனர்.
பதிலுக்கு விரைவில் இஸ்ரேல், பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கவுள்ளது.
திரு டிரம்ப் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 4ஆவது அமெரிக்க அதிபர் அவர்.
முன்பு ஜிம்மி கார்ட்டர், பில் கிளிண்டன், ஜார்ஜ் W புஷ் ஆகியோர் அங்கு உரையாற்றியிருக்கின்றனர்.
பின்னர் திரு டிரம்ப் எகிப்து செல்லவுள்ளார்.
அவர் எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டாஹ் அல்-சிசியுடன் (Abdel Fattah al-Sisi) காஸா போர்நிறுத்தம் குறித்த அமைதி மாநாட்டில் கலந்துகொள்வார்.
அந்த மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தமது திட்டத்திற்கு ஆதரவு பெறவும் மத்திய கிழக்கில் அமைதி நிலைக்கவும் திரு டிரம்ப் மாநாட்டை நடத்துகிறார்.

ஆதாரம் : CNA