Skip to main content
"டிரம்ப்பைப் போல் இன்னும் பலர் உலகிற்குத் தேவை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"டிரம்ப்பைப் போல் இன்னும் பலர் உலகிற்குத் தேவை" - இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புகழாரம்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலிய நாடாளுமன்றமான கனெஸெட்டில் (Knesset) உரையாற்றியிருக்கிறார்.

அவர் பேசுவதற்கு முன் இஸ்ரேலியப் பிரதமரும் நாடாளுமன்ற நாயகரும் அவருக்குப் புகழாரம் சூட்டினர்.

"இஸ்ரேலுக்கு உறுதுணையாக நின்ற அமெரிக்க அதிபர்," என்று பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறினார்.

சண்டைநிறுத்தம், பிணையாளிகளின் விடுதலை, ஈரானுடன் நடந்த போரின்போது அவர் அளித்த ஆதரவு ஆகியவற்றைத் திரு நெட்டன்யாஹு சுட்டினார்.

நாடாளுமன்ற நாயகர் அமிர் ஒஹானா (Amir Ohana) அதிபர் டிரம்ப்பிற்கு நொபெல் அமைதிப் பரிசு வழங்கவேண்டும் என்று கூறினார்.

அடுத்த ஆண்டு அதிபர் டிரம்ப்பைப் பரிசுக்கு நியமிக்கவிருப்பதாகவும் திரு ஒஹானா கூறினார்.

"உலகில் இன்னும் பலர் திரு டிரம்ப்பைப் போல் இருக்கவேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்