"போரை நிறுத்துங்கள்" - ரஷ்ய - உக்ரேன் அதிபர்களுக்கு டிரம்ப் கோரிக்கை
வாசிப்புநேரம் -
(படம்: AP Photo/Aurelien Morissard, Pavel Bednyakov)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய - உக்ரேன் போரை முடிவிற்குக் கொண்டுவரும்படி இரு நாட்டு அதிபர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு மாதச் சண்டை நிறுத்தை நடப்புக்கு கொண்டு வருவது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரேன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அடுத்த சில நாள்களில் அந்நாட்டில் ஆகாயத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதைத் தொடர்ந்து திரு டிரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.
உக்ரேனில் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் (Volodymyr Zelenskyy) வெள்ளை மாளிகை நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என்றும் திரு டிரம்ப் சொன்னார்.
அடுத்த வாரம் உக்ரேன் ரஷ்யா இரு நாடுகளும் ஒரு மாதச் சண்டை நிறுத்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : Reuters