Skip to main content
ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பவேண்டாம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பவேண்டாம் - சீனாவிடம் டிரம்ப் வேண்டுகோள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பவேண்டாம் என்று சீன அதிபர் சி சின்பிங்கிடம் (Xi Jinping) கேட்டுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.

அதற்கு அதிபர் சி சீனா ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Fox Business Network செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் திரு டிரம்ப் அதனைத் தெரிவித்தார்.

ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பும் நாடுகள் மீது 50 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று சென்ற வாரம் அவர் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சீன அதிபர் சியிடம் கடிதம்வழி தமது கோரிக்கையை முன்வைத்ததாய்த் திரு டிரம்ப் சொன்னார்.

அடுத்த மாதம் திரு சியைச் சந்திக்கத் திரு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

மத்திய கிழக்குப் போரால் எண்ணெய்ச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், வெனிசுவேலாவின் தற்போதைய நிலவரம் ஆகியவை அந்தச் சந்திப்பை எவ்விதத்திலும் பாதிக்காது என்று நம்புவதாகச் சொன்னார் திரு டிரம்ப்.

 

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்