Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளன : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வாசிப்புநேரம் -
இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளன : அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

படம்: Reuters

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக முழுமையான சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

Truth Social சமூக ஊடகத்தில் அது குறித்துத் திரு டிரம்ப் பதிவிட்டுள்ளதாக BBC செய்தி கூறுகிறது.

"இரவு முழுவதும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையை உடனடியாகவும் முழுமையாகவும் நிறுத்த இணக்கம் தெரிவித்துள்ளன" என்று அப்பதிவில் இருப்பதாக BBC சொன்னது.

"இவ்விவகாரத்தில் பொறுப்புடன் நடந்துகொண்ட இரு நாடுகளுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டதாக அச்செய்தி கூறுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்