அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் உறவு முன்புபோல் இல்லை - டிரம்ப்
This audio is generated by an AI tool.
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு முன்பைப்போல் இல்லையென்று அதிபர் டோனல்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
The Sun என்ற பிரிட்டிஷ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.
இருநாடுகளுக்கும் இடையில் மிக உறுதியான உறவு இருந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இப்போது ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளுடன் அமெரிக்காவுக்கு மிக நெருக்கமான உறவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) அமெரிக்காவுக்கு உதவியாக இல்லை என்றார் அவர்.
பிரிட்டனிடம் அதை எதிர்பார்க்கவில்லை என்ற அவர் பிரிட்டனை நேசிப்பதாகக் கூறினார்.
ஈரான் தொடுக்கும் ஏவுகணைகளை முறியடிக்க அமெரிக்கா, பிரிட்டனின் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமென திரு ஸ்டாமர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அது அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தாலும் அதற்கான அனுமதிக்கு நீண்டகாலம் பிடித்ததாகத் திரு டிரம்ப் கூறினார்.