Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"வெனிசுவேலாவில் எந்த எண்ணெய் நிறுவனங்கள் செயல்படும் என்பதை அமெரிக்கா முடிவு செய்யும்"

வாசிப்புநேரம் -
"வெனிசுவேலாவில் எந்த எண்ணெய் நிறுவனங்கள் செயல்படும் என்பதை அமெரிக்கா முடிவு செய்யும்"
படம்: Reuters/Evelyn Hockstein
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெனிசுவேலாவில் எந்த எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்யும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியபோது அவர் அவ்வாறு சொன்னார்.

சென்ற வாரம் கராகஸ் (Caracas) நகரில் புகுந்த அமெரிக்க ராணுவம் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் (Nicolas Maduro) கைது செய்தது.

வெனிசுவேலாவின் எண்ணெய் வளமே அந்த நடவடிக்கைக்குக் காரணம் என்கிறார் திரு டிரம்ப்.

திரு மதுரோவை ஆட்சியிலிருந்து அகற்றியதை மெச்சும் அவர் வெனிசுவேலாவின் எதிர்காலத்துக்கும், அமெரிக்காவில் எரிசக்தி விலையைக் குறைவாக வைத்திருக்கவும் அது உதவும் என்கிறார்.

வெனிசுவேலா எண்ணெய்க் கட்டமைப்புக்குப் புத்துயிரூட்ட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 100 பில்லியன் டாலர் செலவிடும்; அது அமெரிக்க அரசாங்கத்தின் பணமல்ல என்று திரு டிரம்ப் கூறினார்.

ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்