ஈரானுக்கு நேற்று வரை கற்காலம் இன்று முதல் பொற்காலம் - அதிபர் டிரம்ப்
படம்: AFP
This audio is generated by an AI tool.
ஹோர்முஸ் நீரிணையில் பெரிய அளவில் கப்பல் போக்குவரத்து ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ஈரானைக் கற்காலத்திற்குத் தள்ளுவோம் என்று மிரட்டிய திரு டிரம்ப் தற்போது அதற்கு நேர்மாறாக அமெரிக்காவைப் போலவே அது மத்திய கிழக்கின் பொற்காலத்தில் காலடி வைப்பதாகச் சொன்னார்.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு இணங்கிய சில மணி நேரத்தில் அவர் பேசினார்.
மீண்டும் நீரிணைக்குக் கப்பல்கள் வருவதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார் அவர்.
ஈரானைத் முற்றிலுமாகத் தாக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு முடிவடைய ஒரு மணிநேரம் இருந்த நிலையில் இரு நாடுகளும் இரண்டு வாரப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
இதனால் பல வாரங்களாக முடங்கிக்கிடந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் உயிர்பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.