பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கு டிரம்ப் இழப்பீடு செலுத்தவேண்டும்
(படம்: Kena Betancur & Andrew KELLY / various sources / AFP)
சஞ்சிகை எழுத்தாளரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் 5 மில்லியன் டாலர் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
1996ஆம் ஆண்டில் நியூயார்க் பகுதிவாரிக் கடையில் திரு. டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈ ஜீன் கேரல் (E. Jean Carroll) 2019ஆம் ஆண்டு குற்றஞ்சாட்டினார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடும் குற்றச்சாட்டை நடுவர்கள் நிராகரித்தாலும் திரு டிரம்ப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அவர்கள் தீர்மானித்தனர்.
அவர் கேரலை அவதூறு செய்ததாகவும் நடுவர்கள் கூறினர்.
சிவில் வழக்கு விசாரணையில் கலந்துகொள்ளாத திரு டிரம்ப், கேரலை யார் என்று தெரியாது என மீண்டும் வலியுறுத்தினார்.
தமக்கு எதிரான தீர்ப்பை ஒரு மானக்கேடு என்றும் தம்மைக் குறிவைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றும் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அவர் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட எண்ணுகிறார்.
நடுவர்களின் தீர்ப்பு அவரின் பிரசாரத்தை
அவ்வளவாகப் பாதிக்காது என்று கருதப்படுகிறது.
திரு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் அதை எதிர்க்கட்சிகளின் சதியாக எண்ணலாம் என்று கூறப்படுகிறது.