ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 விழுக்காடு வரி: டிரம்ப்
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: Ting Shen / AFP)
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்படும் எல்லாவகை ஒயினுக்கும் (wine) மற்ற மதுபானங்களுக்கும் 200 விழுக்காடு வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அமெரிக்க விஸ்கிக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கத் திட்டமிடும் வரியைக் கைவிடாவிட்டால் அமெரிக்காவும் வரி விதிக்கும் என்றார் அவர்.
தம்முடைய வரி விதிப்பு அமெரிக்காவின் ஒயின் வர்த்தகத்துக்குப் பயனளிக்கும் என்று திரு டிரம்ப் சொன்னார்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாது என்று கூறும் பிரான்ஸ், தனது தொழில்துறையைப் பாதுகாக்க உறுதியளித்தது.
ஐரோப்பிய ஒன்றியம் சென்ற ஆண்டு (2024) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ஒயினின் மதிப்பு 4.9 பில்லியன் யூரோ (7.1 பில்லியன் வெள்ளி).
ஐரோப்பாவின் ஒட்டுமொத்த ஒயின் ஏற்றுமதியில் அது 29 விழுக்காடு.
அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் மதுபான ஏற்றுமதியில் சுமார் பாதியைப் பிரான்ஸ் செய்கிறது. இத்தாலியின் பங்கு சுமார் 40 விழுக்காடு.

ஆதாரம் : Others