நொபெல் பரிசு கிடைக்காததால் அதிபர் டிரம்ப் கடுங்கோபம்?
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நொபெல் அமைதிப் பரிசு கிடைக்காததால் இனி அமைதியைக் கட்டிக்காக்க வேண்டிய கட்டாயமில்லை என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
திரு டிரம்ப் அப்படிச் சொன்னதாக நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Støre) சொன்னார்.
கிரீன்லந்தை எப்படியும் கைப்பற்றி விடுவதில் திரு டிரம்ப் உறுதியாக இருக்கிறார்.
அவர் நாளுக்கு நாள் கிரீன்லந்துக்கு எதிராக விடுக்கும் எச்சரிக்கைகள் அதிகரிக்கின்றன.
சென்ற சனிக்கிழமை (ஜனவரி 17) அவர் கிரீன்லந்துக்கும் டென்மார்க்குக்கும் ஆதரவாக நிற்கும் நாடுகளின் மீது 10 விழுக்காட்டு வரியை அறிவித்தார்.
மோசமாகும் சூழ்நிலையைச் சமாளிக்கப் பல நாட்டுத் தலைவர்கள் அதிபர் டிரம்ப்பைச் சமாதானப்படுத்த முயன்று வருகிறார்கள்.
அவ்வாறு நார்வேயின் பிரதமரும் அதிபர் டிரம்ப்பை அணுகினார்.
அப்போது அவர், உலகில் 8 போர்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டதாகத் திரு கார் ஸ்டோர் சொன்னார்.