Skip to main content
உக்ரேனுக்குப் புதிய தலைவர் தேவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உக்ரேனுக்குப் புதிய தலைவர் தேவை - அதிபர் டிரம்ப்

வாசிப்புநேரம் -
உக்ரேனுக்குப் புதிய தலைவர் தேவை - அதிபர் டிரம்ப்

(கோப்புப் படம்: Jim WATSON / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 11:25AM புதுப்பிப்பு : 11 Oct 2026 01:34PM
உக்ரேனுக்குப் புதிய தலைவர் தேவை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியுள்ளார்.

ரஷ்ய டீசல் மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியதை உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelensky) குறைகூறியதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் (Vladimir Putin) பேசியதாகத் திரு டிரம்ப் கூறினார்.

உலகச் சந்தைக்கு அதிகமான ரஷ்ய டீசலை அனுப்ப இருவரும் இணங்கியதாக அவர் தெரிவித்தார்.

அதை “பலவீனமான முடிவு” என்று திரு ஸெலென்ஸ்கி சாடினார்.

ரஷ்யாவுடன் உடன்பாடு காணத் திரு ஸெலென்ஸ்கி தடையாக இருப்பதாகத் திரு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

“ரஷ்யாவுடன் உடன்பாடு காணக்கூடிய புதிய தலைவரை உக்ரேனிய மக்கள் பெறவேண்டும்,” என்றார் அவர்.

ரஷ்ய டீசல் மீதான தடைகளைத் தளர்த்துவது, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு உதவும் என்று உக்ரேனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சொல்கின்றன.

இதற்கிடையே உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர் மாண்டனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்