டிரம்ப்பின் வெற்றியில் மகிழும் இந்திய கிராமம்
வாசிப்புநேரம் -
(படம்: Idrees MOHAMMED / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றதில் இந்திய கிராமமொன்றுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
ஆந்திரப் பிரதேசத்தின் வட்லூரு கிராமவாசிகள் திரு டிரம்ப் வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தினர்.
துணையதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் JD வான்ஸின் (JD Vance) மனைவி உஷா வான்ஸ் (Usha Vance) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
38 வயது திருவாட்டி உஷா அமெரிக்காவின் சான் டியாகோ (San Diego) நகரில் பிறந்து வளர்ந்தவர்.
அவரின் கொள்ளுத் தாத்தா வட்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.
திருவாட்டி உஷா கிராமத்திற்கு உதவுவார் என்று கிராமவாசிகள் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
திருவாட்டி உஷாவின் கொள்ளுத் தாத்தா வட்லூரு கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.
திருவாட்டி உஷாவின் தந்தை சென்னை நகரில் வளர்ந்தவர். பின்னர் படிப்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றவர்.
திருவாட்டி உஷா அந்தக் கிராமத்திற்குச் சென்றதே இல்லை.
2014ஆம் ஆண்டு அவரும் JD வான்ஸும் திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஆதாரம் : AFP