Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம் செய்தியில் மட்டும்

டிரம்ப்பின் வெற்றி: உலகில் நிகழும் பூசல்களுக்குத் தீர்வு கிடைக்கலாம் - அரசியல் கவனிப்பாளர்கள்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அவர் 279 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றிருப்பதாக அவற்றின் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

அதிபராவதற்கு 270 அதிபர் மன்ற வாக்குகளைப் பெறவேண்டும்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 223 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

அடுத்து என்ன? டிரம்ப்பின் வெற்றி எவ்வாறு உலகைப் பாதிக்கும்?

அரசியல் கவனிப்பாளர்கள் திரு மணி மு. மணிவண்ணனும் திரு லக்குரெட்டி அழகர்சாமியும் 'செய்தி'யிடம் அதுபற்றி மேலும் பகிர்ந்துகொண்டனர்.

"டிரம்ப் அடிப்படையில் ஒரு வணிகர்"

திரு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் அவர் முன்பு எப்படி அதிபராக நாட்டை வழிநடத்தினாரோ அதைப்போலத்தான் இப்போதும் நடந்துகொள்வார் என்றார் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த அரசியல் கவனிப்பாளர் மணி மு. மணிவண்ணன்.

"அமெரிக்காவின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த முனைவார். நிறைய வரி விதிப்பார். சீனாவிடம் கண்டிப்பாக, கடுமையாகப் பேரம் பேசுவார்." என்றார் அவர்.

அமெரிக்காவில் பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை மோசமாக இருப்பதை டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கவனிப்பாளர் லக்குரெட்டி அழகர்சாமி சுட்டினார்.

திரு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அத்தகைய அம்சங்களில் முன்னேற்றம் காணலாம் என்று அவர் சொன்னார்.

உலகில் நிகழும் பூசல்களுக்குத் தீர்வு கிடைக்கலாம்

திரு டிரம்ப் உக்ரேனுக்கு உதவி செய்யமாட்டார் என்று திரு மணிவண்ணன் குறிப்பிட்டார்.

மேலும் உக்ரேனை NATO கூட்டணியிலும் அவர் சேர்க்கமாட்டார் என்றார் அவர்.

அதற்குப் பதிலாக ரஷ்யாவுடன் இணங்கிப்போகுமாறு திரு டிரம்ப் உக்ரேனிடம் கூற வாய்ப்புகள் அதிகம் என்றார் அவர்.

இதற்கிடையில் உக்ரேன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-காஸா போர் முடிவுக்கு வர வாய்ப்புகள் இருப்பதாகத் திரு லக்குரெட்டி கூறினார்.

வர்த்தகப் பின்னணியைத் திரு டிரம்ப் கொண்டிருப்பதால் அவரால் பேச்சுவார்த்தைகளைச் சரியான முறையில் நடத்த முடியும் என்றும் அதனால் பூசல்கள் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

திருவாட்டி ஹாரிஸ் தாம் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்..

திருவாட்டி ஹாரிஸ் திரு டிரம்ப்பை எதிர்த்துப் பேசுவதில் கவனம் செலுத்தியதைத் திரு மணிவண்ணன் சுட்டினார்.

அதற்குப் பதிலாக தாம் வெற்றி பெற்றால் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்று அவர் சொன்னார்.

தொலைகாட்சிகளில் அவர் பேசும்போது தவறாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்ற தயக்கம் திருவாட்டி ஹாரிஸுக்கு இருந்ததாய் அவர் சொன்னார்.

4 ஆண்டுகளாகத் துணையதிபராக இருந்தவர் திருவாட்டி ஹாரிஸ்.

அந்த 4 ஆண்டுகளில் அவர் அதிபராக இருந்திருந்தால் அவர் எந்த அம்சங்களை இன்னும் நன்றாகச் செய்திருப்பார் என்று கேட்டபோது திருவாட்டி ஹாரிஸ் அதற்குத் தெளிவாகப் பதில் சொல்லவில்லை என்றார் திரு லக்குரெட்டி.

அமெரிக்கா ஒரு பெண்ணை, அதுவும் சிறுபான்மைப் பெண்ணை அதிபராகத் தேர்ந்தெடுக்கத் தயாராக இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகத் திரு லக்குரெட்டியும் திரு மணிவண்ணனும் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்