Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாலிவூட்டுக்கு மேலும் சிறப்புச் சேர்க்க விரும்புகிறேன்: டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப், ஹாலிவூட்டுக்கு மேலும் சிறப்புச் சேர்க்க விரும்புகிறார்.

அதற்காக சில பிரபல நட்சத்திரங்களை ஹாலிவூட் தூதர்களாக அவர் அறிவித்துள்ளார்.

மெல் கிப்சன் (Mel Gibson), ஜான் வோட் (Jon Voight), சில்வெஸ்டர் ஸ்டலோன் (Sylvester Stallone) ஆகியோர் ஹாலிவூட் தூதர்களாக அந்தத் திரைப்படத் துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வர் என்று திரு. டிரம்ப் சொன்னார்.

அந்த மூவர் ஹாலிவூட்டில் மட்டும் பணிகளை மேற்கொள்ளப்போவதில்லை.

மத்திய கிழக்கு போன்ற சர்ச்சைக்குரிய இடங்களிலும் பணியாற்ற அழைக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

திரு டிரம்ப்பின் அறிவிப்பை வரவேற்பதாகத் திரையுலகக் கலைஞர் மெல் கிப்சன் சொன்னார்.

அமெரிக்கக் குடிமகனாகத் தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று அவர் கூறினார்.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்