Skip to main content
ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை நிறுத்தவேண்டும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை நிறுத்தவேண்டும் - ரஷ்யாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் போரை நிறுத்தவேண்டும் - ரஷ்யாவிற்கு டிரம்ப் எச்சரிக்கை

(கோப்புப் படம்: AP/Mystyslav Chernov)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 06 Aug 2025 09:25AM புதுப்பிப்பு : 06 Aug 2025 12:02PM
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) உக்ரேன் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ள ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் வரை காலக்கெடு விதித்திருக்கிறார்.

அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடைய (Vladimir Putin) செயல்களால் பொறுமை இழந்து வருவதாகத் திரு டிரம்ப் சொன்னார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அதிபர் டிரம்ப்புடன் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளார்.

ரஷ்யா மீது தடைகள் விதிப்பது குறித்தும் அமெரிக்கா உக்ரேனிடமிருந்து ஆளில்லா வானூர்திகளை வாங்குவது குறித்தும் இருவரும் பேசியதாகத் திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

உக்ரேன் தலைநகர் கீவ் உட்படச் சில நகர்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் பற்றித் திரு டிரம்ப்பிடம் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் X தளத்தில் பதிவிட்டார்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்