Skip to main content
அமெரிக்க அதிபர் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் - முக்கியமான 7 மாநிலங்களிலும் டிரம்ப் வெற்றி

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தல் - முக்கியமான 7 மாநிலங்களிலும் டிரம்ப் வெற்றி

(கோப்புப் படம்: Reuters/Brian Snyder)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் திரு டோனல்ட் டிரம்ப் அரிஸோனா (Arizona) மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் எந்தப் பக்கமும் சாயக்கூடிய முக்கிய மாநிலங்களாகக் கருதப்பட்ட ஏழிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்ஜியா, நார்த் கரோலைனா, பென்சில்வேனியா, விஸ்கோன்சின், மிச்சிகன், நெவாடா, அரிஸோனா ஆகியவையே அந்த 7 மாநிலங்கள்.

அதிபராவதற்குத் தேவையான 270 அதிபர் மன்ற வாக்குகளைத் திரு டிரம்ப் ஏற்கெனவே பெற்றுவிட்டாலும் சில இடங்களில் வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன.

அரிஸோனா மாநிலத்தின் முடிவுகள் இறுதியாக வெளிவந்துள்ளன. அதன் அதிபர் மன்ற வாக்குகள் பதினொன்றையும் திரு டிரம்ப் கைப்பற்றினார்.

அவருக்குக் கிடைத்த அதிபர் மன்ற வாக்குகள் இப்போது 312க்கு அதிகரித்துள்ளன.

தேர்தலின் மற்றோரு வேட்பாளரான ஜனநாயகக் கட்சியின் திருவாட்டி கமலா ஹாரிஸ் 226 மன்ற வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் மக்களவை எந்தக் கட்சியின் வசம் இருக்கும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி செனட் சபையைக் கைப்பற்றியுள்ளது.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்