Skip to main content
அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப்

(படம்: Jim WATSON / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அவர் 279 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றிருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

அதிபராவதற்கு 270 அதிபர் மன்ற வாக்குகளைப் பெறவேண்டும்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 223 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

முக்கிய மாநிலங்களான ஜார்ஜியா, நார்த் கரோலைனா, பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களோடு இப்போது விஸ்கோன்சின் மாநிலத்திலும் திரு டிரம்ப்புக்கே வெற்றி.

சுமார் ஒரு நூற்றாண்டுக்குப்பின் ஒரு தேர்தல் விட்டு அடுத்தத் தேர்தலில் இரண்டாம் தவணையை வென்றிருக்கும் முதல் அதிபர் திரு டிரம்ப்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் அவர்தான்.

இம்மாதம் (நவம்பர்) 26ஆம் தேதி மோசடி வழக்கில் அவருக்குத் தீர்ப்பளிக்கப்படும்.

78 வயதாகும் டிரம்ப் நான்காண்டுத் தவணைக்காலத்தில் பதவியில் இருக்கும் ஆக மூத்த அதிபர் என்ற சாதனையும் படைத்துவிடுவார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்