உடன்பாடு எட்டவில்லையா? விரைவில் வரி: டிரம்ப்
வாசிப்புநேரம் -
படம்: AFP/Brendan SMIALOWSKI
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) வர்த்தக உடன்பாடுகளை எட்டாத பெரும்பாலான நாடுகளுக்கு விரைவில் வரி நடப்புக்கு வரும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதிக்கு அந்நாடுகள் 15 இலிருந்து 20 விழுக்காடு வரை கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இந்த ஆண்டு (2025) ஏப்ரலில் உலகின் பல நாடுகளுக்கு 10 விழுக்காடு வரி விதித்தார் திரு. டிரம்ப்.
புதிய "உலக வரி" என்னவென்று சுமார் 200 நாடுகளுக்குத் தமது நிர்வாகம் விரைவில் தகவல் அனுப்பும் என்றார் அவர்.
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகள் அந்த வரியைச் செலுத்தியாக வேண்டும்; 200 உடன்பாடுகளைச் செய்வது சாத்தியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்காட்லந்தில் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரைச் சந்தித்தபோது அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

ஆதாரம் : AGENCIES