அமெரிக்க, சீன அதிபர்கள் உரையாடல்
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) இருதரப்பு உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தலைவர்கள் தொலைபேசியில் உரையாடினர்.
அமெரிக்காவில் உற்பத்தியாகும் சோயாவைக் கூடுதலாக வாங்குவது பற்றிச் சீனா ஆலோசிக்கிறது.
தைவானுக்கு ஆயுதங்கள் விற்பது பற்றிச் சீனா எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் உரையாடல் ஆக்ககரமாய் அமைந்ததாக அதிபர் டிரம்ப் கூறினார்.
தலைவர்கள் இருவரும் தொலைபேசியில் பேசுவது சென்ற நவம்பருக்குப் பிறகு இது முதல்முறை.
திரு டிரம்ப் இன்னும் இரண்டு மாதங்களில் பெய்ச்சிங்குக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன-அமெரிக்க உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகத் திரு சி கூறியதாய் சீன ஊடகங்கள் குறிப்பிட்டன.