"புல்லைச் சாப்பிடாமல் விட்டுவிட்டேன்"
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Juan Medina)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
FIFA உலகக் கிண்ணப் போட்டியில் மெக்சிகோவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அஸ்டெகா (Azteca) விளையாட்டரங்கத்தின் புல்லைச் சாப்பிடாதது வருத்தம் என்று இங்கிலாந்து அணிப் பயிற்றுவிப்பாளர் தாமஸ் டுகெல் (Thomas Tuchel) கூறியுள்ளார்.
ஜூலையில் மெக்சிகோ சிட்டியில் (Mexico City) நடந்த இறுதி 16 அணிகள் சுற்றில் மெக்சிகோவை இங்கிலாந்து 3-2 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
அந்தப் போட்டியில் 10 வீரர்களுடன் விளையாடியும் இங்கிலாந்து வென்றது.
“ஆட்டத்துக்குப் பிறகு அங்கிருந்த புல்லைக் கொஞ்சம் சாப்பிடாமல் விட்டுவிட்டேனே என்று வருந்தினேன். அந்தத் தருணத்தின் நினைவுகளை என்றென்றும் என்னுள் வைத்திருக்க விரும்பினேன்,” என்றார் டுகெல்.
அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர். அது தமக்கும் தமது அணி வீரர்களுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பை உருவாக்கியதாக அவர் சொன்னார்.
இந்தப் பிணைப்பை 2028 ஐரோப்பியக் கிண்ணத் தகுதிச்சுற்றுக்கும் எடுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.
இங்கிலாந்து இம்மாதம் உலகக் கிண்ண வெற்றியாளர் ஸ்பெயினை UEFA Nations League போட்டியில் எதிர்கொள்கிறது. குரோஷியாவுடனும் செக் குடியரசுடனும் அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஆதாரம் : AFP