சொல்லிசைக் கலைஞர் டூபக் ஷகுரின் மரணம் - 30 ஆண்டுக்குப்பின் தீர்ப்பு
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Mike Segar)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் பிரபல சொல்லிசைக் கலைஞர் டூபக் ஷகுரின் (Tupac Shakur) மரணத்தில் முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
63 வயது டுவான் "கெஃபி டி" டேவிஸ் (Duane "Keffe D" Davis) ஆபத்தான ஆயுதத்தால் கொன்றதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

1996ஆம் ஆண்டு லாஸ் வேகஸில் திரு ஷகுர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு வயது 25.
30 ஆண்டுகழித்து திரு ஷகுரின் மரணத்திற்குத் தீர்ப்பு கிடைத்துள்ளது.
1996ஆம் ஆண்டு செப்டம்பரில் லாஸ் வேகஸ் சூதாட்டக்கூடத்திற்கு வெளியே டேவிஸின் உறவினரைத் திரு ஷகுரின் ஆட்கள் அடித்தனர்.
டேவிஸ் அதற்குப் பதிலடி கொடுக்க முற்பட்டார்.
சுமார் 2 மணி நேரத்திற்குப்பின் வெள்ளை Cadillac காரில் இருந்த ஒருவரால் திரு ஷகுர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Cadillac காரில் டேவிஸ் வேறொருவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொன்னதாக அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
6 நாள்கள் கழித்து திரு ஷகுர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டோரில் இன்னமும் உயிருடன் இருக்கும் ஒரே நபர் டேவிஸ்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 13ஆம் தேதி டேவிஸுக்குத் தண்டனை விதிக்கப்படும்.

ஆதாரம் : AFP