Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துருக்கியேவில் 6 காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தப் போராடும் அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
துருக்கியேவில் 6 காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தப் போராடும் அதிகாரிகள்

(படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியேவின் ஏகன் (Aegean) கரையில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு வாழும் சுமார் 900 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கின்றனர்.

அந்தப் பகுதியில் மூன்றாவது நாளாகத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது.

நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் 6 காட்டுத்தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுகின்றனர்.

தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காட்டுத்தீயால் சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டதாகத் துருக்கியே சுகாதார அமைச்சு கூறியது.

அவர்களில் சுமார் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சுமார் 1,600 ஹெக்டர் விவசாய நிலம் சாம்பலானது.

தீக்குக் காரணமானவர்கள் என்று நம்பப்படும் 7 பேர் தடுத்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்