Skip to main content
துருக்கியேவில் நிலநடுக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துருக்கியேவில் நிலநடுக்கம் - கட்டடங்கள் தரைமட்டம்

வாசிப்புநேரம் -
துருக்கியேவில் நிலநடுக்கம் - கட்டடங்கள் தரைமட்டம்

படம்: AFP

வெளியீடு : 11 Aug 2025 09:46AM புதுப்பிப்பு : 11 Aug 2025 11:13AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியேவை 6.1 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியது.

வடமேற்கு மாநிலமான பாலிகெசிரில் (Balikesir) கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 81 வயதுப் பெண் மாண்டதாக BBC செய்தி கூறியது.

நிலநடுக்கத்தில் 16 கட்டடங்கள் இடிந்தன. 29 பேர் காயமுற்றனர்.

துருக்கியே நேரப்படி நேற்றிரவு 7.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்வுகள் இஸ்தான்புல் வரை உணரப்பட்டன.

மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்குமுன்னர் 2023ஆம் ஆண்டு துருக்கியேவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் வலுவான நிலநடுக்கத்தில் 50,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.

பக்கத்து நாடான சிரியாவில் 5,000 பேர் மரணமடைந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்