Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Thanksgiving விடுமுறைக்கு முக்கியமானது வான்கோழி... முன்னெப்போதுமில்லாத அளவில் விலையேற்றம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் வான்கோழிகளின் விலை முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் இவ்வாண்டு பறவைக்காய்ச்சல் பரவலால் மில்லியன்கணக்கான கோழிகளும் வான்கோழிகளும் மாண்டன. 

இன்று (24 நவம்பர்) அனுசரிக்கப்படும் Thanksgiving விடுமுறை நாளை முன்னிட்டுப் பலரும் வான்கோழிகளை வாங்கியவண்ணம் உள்ளனர். 

இந்நாளன்று வான்கோழியைச் சமைத்து குடும்பமாக உண்பது பலரின் வழக்கம். 

குறைந்த அளவிலான வான்கோழிகள், விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ள தேவை... இவற்றின் காரணமாக, வான்கோழிகளின் விலை Thanksgiving விடுமுறைக்காலத்தில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு  20 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

விலைவாசி அதிகரிப்பும் விநியோகத் தொடர் சிக்கல்களும் நிலையை மோசமாக்கியுள்ளன. 

இந்நிலையில்,  அதிகரித்துள்ள உணவுப்பொருள் விலைகளை எதிர்நோக்கும் மக்கள் பலருக்கும் நன்றியைக் காட்டும் நாளான இன்று சவால்மிக்க ஒன்றாக அமைவதாய்க் கருதப்படுகிறது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்