Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மெக்சிக்கோவுக்கு 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்க்குட்டியைப் பரிசாக அனுப்பிய துருக்கியே

வாசிப்புநேரம் -
மெக்சிக்கோவுக்கு 'ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்க்குட்டியைப் பரிசாக அனுப்பிய துருக்கியே

(படம்: REUTERS/Luis Cortes)

துருக்கியே, மெக்சிக்கோவுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) வகை நாய் குட்டியைப் பரிசளித்திருக்கிறது.

இந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் துருக்கியேவை நிலநடுக்கம் உலுக்கியபோது காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை அனுப்பிய மெக்சிக்கோவுக்கு நன்றிகூறும் விதமாக அது அமைந்தது.

குறிப்பாகத் துருக்கியேவில் மீட்புப் பணிகளின்போது மெக்சிக்கோவின் 'Proteo' எனும் மோப்ப நாய் இறந்ததன் நினைவாக அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் அனுப்பப்பட்டது. 

அந்த நாய் மெக்சிக்கோவுக்கு வருவதற்காகக் காத்திருக்கும் நிழற்படங்களை மெக்சிக்கோ தேசியத் தற்காப்பு அமைச்சு Twitterஇல் பதிவேற்றியது.

அதற்கு முன்பாக அந்த நாய்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று Twitterஇல் கருத்துக் கணிப்பு ஒன்றும் நடத்தப்பட்டது.

அதற்கு 'Proteo II', 'Arkadas' அல்லது 'Yardim' முதலிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் 'அர்கடாஸ்' (Arkadas) என்னும் பெயருக்கு நல்ல வரவேற்பு. அர்கடாஸ் என்றால் நண்பன் என்று பொருள்.

இதற்கு முன்னர் துருக்கியேவின் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட Proteo எனும் 9 வயது மோப்ப நாய் இருவரைக் காப்பாற்றியது. ஆனால் களைப்பு, கடுங்குளிர் ஆகியவை காரணமாக அது இறந்தது.

துருக்கியேவின் செயலைப் பாராட்டி இணையவாசிகள் கருத்துகள் பதிவிட்டுவருகின்றனர்.

அவற்றில் சில:

✍️ "மனிதர்களும் இந்தப் பூமியில் ஒருவர் மற்றவரை இப்படித்தான் நடத்தவேண்டும்"

✍️ "என்ன ஓர் அருமையான அழகான செயல்"

✍️ "அந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் துருக்கிய மொழியில் பேசுமா ஸ்பானிய மொழியில் பேசுமா" 

என்ற வேடிக்கையான கருத்தும் பதிவிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்