Skip to main content
துருக்கியே ராணுவ விமான விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

துருக்கியே ராணுவ விமான விபத்து - அனைவரும் மரணம்

வாசிப்புநேரம் -
துருக்கியே ராணுவ விமான விபத்து - அனைவரும் மரணம்
(படம்: Giorgi ARJEVANIDZE / AFP)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்கியேவின் ராணுவ விமானத்தில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர்.

நேற்று (11 நவம்பர்) அஸர்பைஜானின் காஞ்சா விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது.

அது துருக்கியே நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ஜார்ஜியா எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானதாகத் துருக்கியேவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

விமானத்தில் விமானச் சிப்பந்திகள் உட்பட மொத்தம் 20 பேர் இருந்தனர்.

எதனால் விமானம் விபத்துக்குள்ளானது என்பதைத் துருக்கியே தெரிவிக்கவில்லை.

சம்பவத்தை நேரில் கண்ட சிலர் எடுத்த காணொளியில் விமானம் சுழன்று விழுவது தெரிகிறது.

விபத்துக்குள்ளானது C-130 Hercules ரக ராணுவ சரக்கு விமானம்.

அது அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்