Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 51 வயது துருக்கியே ஒலிம்பிக் வீரர்....எதனால்?

வாசிப்புநேரம் -
இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 51 வயது துருக்கியே ஒலிம்பிக் வீரர்....எதனால்?

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இணையவாசிகளிடையே அதிகம் பேசப்படும் ஒலிம்பிக் வீரராக மாறியிருக்கிறார் துருக்கியேவின் குறிசுடும் வீரர் யூஸோப் டிகேச் (Yusuf Dikec).

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் 51 வயது டிகேச்.

அதில் என்ன ஆச்சரியம் என்று கேட்பவர்களுக்குப் போட்டியின்போது அவர் காட்டிய திறமையைக் கண்டால் ஆச்சரியம் ஏற்படவே செய்யும்.

டிகேச் குறிசுடும் போட்டியில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட படம் இணையத்தில் பரவிவருகிறது.

அதில் அவர் மிகவும் சாதாரணமாக ஒரு கையைக் காற்சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மற்றொரு கையில் துப்பாக்கியைப் பிடித்துள்ளார்.

குறிசுடும் போட்டிக்கான சிறப்புக் கண்ணாடிக்குப் பதிலாக வழக்கமான மூக்குக் கண்ணாடியை அவர் அணிந்திருந்தார். காதுகளிலும் அவர் சாதாரணமான ஒலித் தடுப்புக் கருவியை (earplug) அணிந்திருந்தார்.

டிகேச்சின் அந்தப் படம் 'X' சமூக ஊடகத்தில் 62 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

“பிரத்தியேக கண்ணாடி இல்லை, கண்களையும் ,காதுகளையும் பாதுகாக்கும் சிறப்புக் கருவிகள் இல்லாத 51 வயது வீரரைத் துருக்கியே அனுப்பியிருக்கிறது. அவர் வெள்ளிப் பதக்கம் வென்று தந்துள்ளார்" என்று டிகேச்சைப் பற்றி 'X' தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்