Skip to main content
நடுவானில் மாண்ட விமானி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நடுவானில் மாண்ட விமானி - அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

வாசிப்புநேரம் -
நடுவானில் மாண்ட விமானி - அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

(கோப்புப் படம்: REUTERS/Murad Sezer)

வெளியீடு : 10 Oct 2024 09:31AM புதுப்பிப்பு : 10 Oct 2024 10:30AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

துருக்கியே விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் நடுவானில் திடீரென மாண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் விமானம் நியூயார்க்கில் அவசரமாகத் தரையிறங்கியது.

விமானம் அமெரிக்காவின் சியாட்டல் (Seattle) நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்டபோது சம்பவம் நிகழ்ந்தது.

அந்த 59 வயது விமானிக்கு முதலுதவி வழங்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து விமானத்தைத் துணை விமானி அவசரமாகத் தரையிறக்கினார். விமானம் தரையிறங்குவதற்கு முன்பே அந்த விமானி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நியூயார்க் விமான நிலையத்திலிருந்து பயணிகளை அவர்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்துவந்த விமானியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த துருக்கியே விமான நிறுவனம் அவரின் மறைவு பேரிழப்பு என்று சொன்னது.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்