Skip to main content
Turkish Airlines விமானத்தில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Turkish Airlines விமானத்தில் தீ

வாசிப்புநேரம் -
Turkish Airlines விமானத்தில் தீ

படம்: Reuters

Turkish Airlines விமானம் நேப்பாளத்தின் காத்மாண்டு நகரத்தில் தரையிறங்கும்போது தீப்பற்றியது.

சம்பவம் இன்று (மே 11) காலை நடந்தது.

விமானத்தில் 277 பயணிகளும் 11 சிப்பந்திகளும் இருந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இஸ்தான்புல் நகரிலிருந்து வந்த விமானத்தின் தரையிறக்க உதவும் கருவியில் உண்டான தீப்பொறியால் தீ மூண்டதாக நேப்பாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

அனைத்துப் பயணிகளும் ஊழியர்களும் விமானத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

விபத்தால் காத்மாண்டுவின் ஒரே விமான ஓடுபாதை 2 மணி நேரத்திற்கு மூடப்பட்டது. தற்போது அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேப்பாளம் உலகிலேயே ஆகச் சவாலான ஓடுபாதைகளைக் கொண்டது.

திறமை வாய்ந்த விமானிகளுக்குக்கூட சிலநேரம் அது சவாலாக இருப்பதுண்டு.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்