துருக்கியேவில் இஸ்ரேலியத் துணைத் தூதரகத்துக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 200 பேர் கைது
படம்: REUTERS/Murad Sezer
This audio is generated by an AI tool.
துருக்கியேவில் உள்ள இஸ்ரேலியத் துணைத் தூதரகம் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 200 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியே பாதுகாப்புப் படையினர் தேசிய அளவில் மேற்கொண்ட தேடலில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கை இது என்று அந்நாட்டு நீதி அமைச்சர் அக்கின் குர்லேக் (Akin Gurlek) தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) நடந்தது.
இஸ்தான்புல் (Istanbul) நகரில் அமைந்துள்ள துணைத் தூதரகத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிக்காரர் ஒருவர் மாண்டார். இருவருக்குக் காயம் ஏற்பட்டது.
அந்த இருவர் உட்பட 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாண்ட துப்பாக்கிக்காரருக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருந்ததாகத் துருக்கியே ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இதுவரை எந்த அமைப்பும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.