Skip to main content
நேப்பாள வெள்ளம் : 28 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாள வெள்ளம் : 28 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

வாசிப்புநேரம் -
நேப்பாள வெள்ளம் : 28 மலேசியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

(படம்: AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 08:30PM புதுப்பிப்பு : 05 Nov 2026 12:10PM

நேப்பாளப் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 28 மலேசியர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 174,000 ரிங்கிட் (சுமார் 55,000 வெள்ளி) நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO) அந்த உதவியை வழங்குவதாக The Star ஊடகம் சொன்னது.

54 பேரின் விவரங்கள் ஆராயப்பட்டன. 

அவர்களில் 28 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான தகுதி இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. 

தகுதிபெறும் குடும்பங்களுக்கு உடனடி நிதியுதவியாகத் தலா 3,000 ரிங்கிட் (சுமார் 940) வழங்கப்படும். 

உடற்குறையுள்ளோர் காப்புறுதித் திட்டத்தின்கீழ் குடும்பத்தினரை இழந்தோருக்கான ஓய்வூதியமும் அவர்களுக்குக் கிடைக்கும்.

தேவையான ஆவணங்களும் தகவல்களும் கிடைத்ததும் பணம் வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என்று அமைச்சு சொன்னது.

கோலாலம்பூரில் இன்று 16 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

தகுதிபெறும் எவரும் விடுபடாமல் இருக்க விரிவான சோதனை நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சு கூறியது.

இதுவரை தொடர்புகொள்ளப்படாத குடும்பத்தினர் அருகிலுள்ள அமைப்பின் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சந்தா செலுத்திய பதிவுகள் இல்லாதோருக்கும் உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்