Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மஸ்க் ஒப்பந்த விதிமுறைகளை மீறவில்லை: Twitter

வாசிப்புநேரம் -
மஸ்க் ஒப்பந்த விதிமுறைகளை மீறவில்லை: Twitter

(கோப்புப் படம்: AP Photo/ Kiichiro Sato)


Twitter நிறுவனம், சில ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தியவருக்குப் பணம் அளித்தது செல்வந்தர் இலோன் மஸ்க்கின் நிபந்தனைகளை எந்த விதத்திலும் மீறுவதாகாது என்று தெரிவித்துள்ளது.

திரு மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு நிறுவனத்தைப் பெறுவதாக இருந்தது.

ஆனால் அவர் ஒருசில காரணங்களை முன்வைத்து, நிறுவனத்தை வாங்கப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

அவர் அளித்த காரணங்களில் ஒன்று, தகவல்களை அம்பலப்படுத்தியவருக்கு Twitter நிறுவனம் பணம் அளித்தது.

நிறுவனம் குறித்த தகவல்களை வெளியிட்ட திரு பீட்டர் ஸாட்கோ (Peiter Zatko) என்பவருக்கு Twitter 7.75 மில்லியன் டாலர் பணம் வழங்கியது. அது நிறுவனத்துடன் இணைவதற்காக மஸ்க் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியதாகத் அவரது வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பினர்.

திரு மஸ்க்குக்கும் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் Twitter அதுபோன்ற கட்டணங்களைச் செலுத்த அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டது.

அதை இப்போது Twitter நிறுவனம் மறுத்திருக்கிறது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்