Skip to main content
கடும் வெப்பத்திற்குப் பலியான பிஞ்சுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கடும் வெப்பத்திற்குப் பலியான பிஞ்சுகள்

வாசிப்புநேரம் -
கடும் வெப்பத்திற்குப் பலியான பிஞ்சுகள்

படம்: REUTERS/Abdul Saboor

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரான்சில் கடும் வெப்பத்தால் காரில் இருந்த இரு குழந்தைகள் மாண்டனர்.

2 வயதும் 4 வயதும் நிரம்பிய இரு குழந்தைகள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த காரில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அனல்காற்றினால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயர்ந்துவரும் உலக வெப்பநிலை (Global warming) அனல்காற்றை மோசமாக்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிரான்சில் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

அதனால் 1,350க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

காலை, இரவு நேரங்களில் சராசரி வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ் என்று  தரவு காட்டுகிறது.

அது 2025ஆம் ஆண்டைவிட அதிகம்.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை அது மிக அதிகம்.

பிரான்சின் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்