Skip to main content
Nvidia நுண்சில்லுகளின் சட்டவிரோத ஏற்றுமதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Nvidia நுண்சில்லுகளின் சட்டவிரோத ஏற்றுமதி - 2 சீன நாட்டவர் கைது

வாசிப்புநேரம் -
Nvidia நுண்சில்லுகளின் சட்டவிரோத ஏற்றுமதி - 2 சீன நாட்டவர் கைது

(படம்: Reuters/Caroline Chia)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Nvidia நிறுவனச் செயற்கை நுண்ணறிவு நுண்சில்லுகளைச் சட்டவிரோதமாகச் சீனாவுக்கு அனுப்பியதாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில்
இரு சீன நாட்டவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் சீனாவுக்கு அனுப்பிய நுண்சில்லுகளின் மொத்த மதிப்பு பல மில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டது.

28 வயதாகும் இரு நபர்களும் அக்டோபர் 2022 முதல் கடந்த மாதம் வரை முறையான உரிமம் பெறாமல் சீனாவுக்கு நுண்சில்லுகளை ஏற்றுமதி செய்ததாக நம்பப்படுகிறது.

2022இல் அவர்கள் நிறுவிய ALX Solutions நிறுவனத்தின் வழியாகச் சட்டவிரோதமான நுண்சில்லு ஏற்றுமதிகளை இருவரும் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

நுண்சில்லுகள் முதலில் சிங்கப்பூர், மலேசியா இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன என்றும் பிறகு மற்ற ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டது.
 
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்