Skip to main content
அமைதிப் பேச்சுக்காக இஸ்லாமாபாத்தில் விடுமுறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமைதிப் பேச்சுக்காக இஸ்லாமாபாத்தில் விடுமுறை

வாசிப்புநேரம் -
அமைதிப் பேச்சுக்காக இஸ்லாமாபாத்தில் விடுமுறை

படம்: Aamir QURESHI / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு அடுத்த இரண்டு நாள்களுக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறுகிய கால அவகாசத்தில் அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 8) வெளியானது. 

விடுமுறைக்கான காரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இதுபோன்ற அரசதந்திர நிகழ்வுகளின்போது பாதுகாப்புக் கருதி அதிகாரிகள் பொது விடுமுறையை அறிவிப்பர் என்று கூறப்படுகிறது. 

மத்திய கிழக்கு போர் தொடர்பாக அமெரிக்க, ஈரானியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. 

அமெரிக்க துணையதிபர் JD வான்ஸ் (JD Vance) வரும் வாரயிறுதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவிருக்கும் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று வெள்ளை மாளிகை கூறியது.  

காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், எரிசக்திப் பயனீட்டு நிலையங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகள் தொடர்ந்து திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்