Skip to main content
பிரான்ஸில் புயல், கன மழை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரான்ஸில் புயல், கன மழை - மரம் விழுந்து மாது மரணம்

வாசிப்புநேரம் -
பிரான்ஸில் புயல், கன மழை - மரம் விழுந்து மாது மரணம்

படம்: OLIVIER CHASSIGNOLE / AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரான்ஸில் ஏற்பட்ட புயல், கன மழையால் இருவர் மாண்டனர்.

நேற்று மாலை சென் விக்டுனியன் (Saint-Victurnien) பகுதியில் மரம் ஒன்று விழுந்து மாது ஒருவர் மாண்டதாகக் கூறப்பட்டது.

டாலமியூ (Dolomieu) வட்டாரத்தில் மின்னல் வெட்டியதில் பட்டறை ஒன்று தீப்பிடித்தது. அதில் ஆடவர் ஒருவர் இறந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பிரான்ஸில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு மோசமான வெயிலுக்குப் பிறகு மழையும் புயலும் புரட்டி எடுக்கிறது.

சுமார் 53,000 வீடுகளில் மின்சாரம் இல்லை.

ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் முன்னதாக முன்னுரைக்கப்பட்டது.

இடியுடன் கூடிய கனமழைக்கான கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்