Skip to main content
32 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

32 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தல் - இருவர் கைது

வாசிப்புநேரம் -
32 கிலோகிராம் போதைப்பொருள் கடத்தல் - இருவர் கைது
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் 3.3 மில்லியன் ரிங்கிட் (சுமார் 1 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியதாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் செப்டம்பர் 28ஆம் தேதி கூச்சிங் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக The Star ஊடகம் சொன்னது.

ஜொகூர் பாருவிலிருந்து விமானத்தில் வந்த அவர்களின்பெட்டிகளில் சுமார் 32.7 கிலோகிராம் Erimin 5 போதை மாத்திரைகள் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

அவை 163,650 போதைப்புழங்கிகள் பயன்படுத்தக் கூடிய அளவு.

கைதானவர்களில் ஒருவர் வேலையில்லாத 25 வயது ஆடவர். மற்றொருவர் 39 வயது மீனவர்.

இருவரும் ஜொகூரில் இயங்கும் போதைப்பொருள் கும்பலுக்காக வேலை செய்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு முன்பும் அவர்கள் போதைப்பொருள் கடத்தியதாகக் காவல்துறை கூறியது.

அதற்கென இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட்  வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாகக் கடத்த முயன்றபோது அவர்கள் பிடிபட்டனர்.

அக்டோபர் 7ஆம் தேதி இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப்படும்.

ஆதாரம் : Others/The Star

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்