Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்

வாசிப்புநேரம் -
ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் விமானிகள் இருவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு அதனைத் தெரிவித்தது.

7 மாதங்களுக்கு அவர்கள் விமானத்தை ஓட்ட முடியாது.

விமானத்தைச் செலுத்துவதற்கு முன்னர் அவர்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமாக மதுபானம் அருந்தியதாகவும் ஜப்பான் ஏர்லைன்ஸிடம் பொய் சொன்னதாகவும் அமைச்சு சொன்னது.

விதிமுறைகளை அறிந்தும், விமானம் புறப்படவிருந்த 12 மணி நேரத்துக்கு முன்பு அவர்கள் அதிக அளவில் மதுபானம் குடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் மெல்பர்னிலிருந்து தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் 3 மணி நேரம் தாமதமானது.

விமானிகள் இருவரும் அதிக அளவில் மதுபானம் அருந்தியது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

2 மாதங்களுக்கு அவர்களுக்கு 30 விழுக்காடு குறைவான சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் அப்போது தெரிவித்தது.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்