மது அருந்தியிருந்த விமானிகளுக்கு விமானம் ஓட்டத் தடை விதித்த ஜப்பான்
வாசிப்புநேரம் -

(படம்: envato.com)
ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் விமானிகள் இருவர் ஏழு மாதம் வேலையிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு விமானப் பயணத்தின்போது அவர்கள் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தனர். அது குறித்துக் கேட்டபோது நிறுவனத்திடம் அவர்கள் பொய் சொன்னதும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு கூறியது.
விதிமுறைகள் தெரிந்திருந்தும் அவர்கள் அவ்வாறு செய்ததாக அமைச்சு சொன்னது.
சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் அந்தச் சம்பவம் நடந்தது.
மெல்பர்னிலிருந்து (Melbourne) தோக்கியோவுக்கு (Tokyo) அவர்கள் விமானத்தைச் செலுத்தவிருந்தனர். ஆனால் மது அருந்திய காரணத்தால் விமானப் பயணம் 3 மணி நேரம் தடைபட்டது.
அவர்கள் இருவரும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் சொன்னது. இரண்டு மாதங்களுக்கு அவர்கள் இருவரின் சம்பளத்தில் 30 விழுக்காடு குறைத்துக்கொள்ளப்படும் என்று நிறுவனம் கூறியது.
விமானிகள் மது அருந்திய சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்ததால் 2019ஆம் ஆண்டு ஜப்பான் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது.

ஆதாரம் : AFP