உலகம் trending
நடுவானில் மோதிக்கொண்ட போர்விமானங்கள்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்: X/@Osinttechnical
அமெரிக்காவின் ஐடஹோ (Idaho) மாநிலத்தில் நடந்த Gunfighter Skies வான்சாகசக் காட்சியில் இரு போர்விமானங்கள் மோதிக்கொண்டன.
சம்பவம் நேற்று (மே 17) நடந்ததாக BBC ஊடகம் தெரிவித்தது. விமானிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். ஆனால் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.
இரு விமானங்களும் தீப்பற்றிக்கொண்டன.
விபத்துக்குப் பின்னர் காட்சி நடந்த ஆகாயப்படைத் தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. வான்வெளி சாகசக் காட்சி ரத்து செய்யப்பட்டது.
விசாரணை நடக்கிறது.
விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானவை. ஒரு விமானத்தின் விலை கிட்டத்தட்ட 67 மில்லியன் டாலர் (சுமார் 85.82 மில்லியன் வெள்ளி) என்று கடற்படை கூறியது.
விமானிகளுக்குத் தற்போது மருத்துவச் சோதனை நடைபெறுவதாகக் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
Gunfighter Skies காட்சி இதற்குமுன் 2018ஆம் ஆண்டு நடந்த போதும் விபத்து ஏற்பட்டது. அதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.