"இரண்டு மன்னர்கள்" - அரச குடும்பத்தைப் பாராட்டிய அதிபர் டிரம்ப்
(படம்: Henry Nicholls / AFP)
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அமெரிக்காவும் பிரிட்டனும் நெருங்கிய நட்பு நாடுகள் என்று கூறியிருக்கிறார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். தமது அன்னைக்கு இரண்டாம் எலிசபெத் அரசியாரையும், மன்னர் சார்ல்ஸையும் மிகவும் பிடிக்கும் என்று அதிபர் டிரம்ப் சொன்னார்.
பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் வாங்கிய 250ஆவது ஆண்டுநிறைவில் அரசகுடும்பத்தை வரவேற்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.
மன்னர் சார்ல்ஸ் வருவதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு எப்போதுமே பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்க விருப்பம் என்றும் அது பற்றி மன்னரிடம் பேசப்போவதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மன்னர் சார்ல்ஸும், அதிபர் டிரம்ப்பும் சந்திக்கும் படத்தை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் X தளம் இரண்டு மன்னர்கள் என்று குறிப்பு வெளியிட்டது.
இங்கே மன்னர்கள் தேவையில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்திய டிரம்ப் எதிர்ப்பாளர்கள் சமூக ஊடகப் பக்கங்களில் கோபித்துக் கொண்டனர்.
மன்னர் சார்ல்ஸும் அவரது மனைவி கமில்லாவும் அமெரிக்காவிற்கு 4 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.