Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் காணாமல் போன இரு சிங்கப்பூரர்கள் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய எரிமலை வெடிப்பில் காணாமல் போன இரு சிங்கப்பூரர்கள் மரணம்

Handout/National Search and Rescue Agency (BASARNAS)/AFP

வெளியீடு : 10 May 2026 01:40PM புதுப்பிப்பு : 10 May 2026 02:35PM

இந்தோனேசியாவின் டுக்கோனோ (Dukono) எரிமலையில் காணாமல் போன சிங்கப்பூரர்கள் இருவர் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் மீட்பு அமைப்பின் தலைவர் அத்தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மாண்டோரில் ஒருவர் 30 வயது ஹெங் வென் சியாங் திமத்தி (Heng Wen Qiang Timothy).

இன்னொருவர் 27 வயது  ஷாஹின் முஹ்ரிஸ் பின் அப்துல் ஹமிட் (Shahin Muhrez bin Abdul Hamid).

இருவருக்கும் சொந்தமானவை என்று நம்பப்படும் உடைமைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

எரிமலை நேற்று முன்தினம் வெடித்ததில் மூவர் காணாமல் போயினர்.

அவர்களில் ஓர் இந்தோனேசியரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.

இரு சிங்கப்பூரர்களைத் தேடும் பணியில் சுமார் 150 பேர்  ஈடுபட்டனர்.

எரிமலையிலிருந்து காப்பாற்றப்பட்ட மேலும் 7 சிங்கப்பூரர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்