உலகம் trending
பினாங்கில் சரிந்த விழுந்த கடைவீடு - சுற்றுப்பயணிகள் காயம்
வாசிப்புநேரம் -
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: FB/Li Hin
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கடைவீடு ஒன்றின் முற்பகுதி சரிந்து விழுந்ததில் இரு சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.
சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஆர்மேனியன் ஸ்ட்ரீட்டில் (Armenian Street) நடந்தது.
இலங்கை நாட்டவர் என்று நம்பப்படும் தம்பதி கடைவீட்டைத்தாண்டி நடந்துகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று கடைவீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து மரப்பலகையும் கான்கிரீட் கற்களும் சரிந்து விழுந்தன.
இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மருத்துவக் குழு அவர்களுக்கு முதலுதவி அளித்தது. பிறகு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் கடைவீட்டைச் சுற்றியுள்ள பகுதியைப் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு மூடியுள்ளனர்.
கடைவீட்டைச் சோதனையிடும் பணியும் விபத்துக் குறித்த விசாரணையும் தொடர்கின்றன.

ஆதாரம் : Others