Skip to main content
நேப்பாள வெள்ளம்: 9 நாள்களுக்குப்பின் இருவர் மீட்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாள வெள்ளம்: 9 நாள்களுக்குப்பின் இருவர் மீட்பு

வாசிப்புநேரம் -
நேப்பாள வெள்ளம்: 9 நாள்களுக்குப்பின் இருவர் மீட்பு

AFP PHOTO/Nepal Army/HANDOUT

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளப் பெருவெள்ளம் ஏற்பட்டு 9 நாளான நிலையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சுரங்கத்தில் பணியாற்றியவர்கள் என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கூறினர்.

திரிசூலி வட்டாரத்தின் நீர்மின் ஆலைப்பகுதியில் தற்போது மீட்புப்பணி நடைபெறுகிறது.

ஊழியர்கள் சேறும் சகதியுமான நிலையில் காப்பாற்றப்பட்டதை ஊடகக் காணொளிகளில் பார்க்கமுடிகிறது.

Related article image
AFP PHOTO/Nepal Army/HANDOUT
Related article image
AFP PHOTO/Nepal Army/HANDOUT

கடந்த புதன்கிழமை (26 ஆகஸ்ட்) நேப்பாள-திபெத் எல்லையில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன.

1,200க்கும் அதிகமானோர் மாண்டனர்.

5,000க்கு மேற்பட்டோரைக் காணவில்லை.

சுமார் 900 பேர் நீர்மின் ஆலை ஊழியர்கள். 

பனிப்பாறை உடைந்ததால் பேரிடர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்